ஆகத்து 27-ம் நாள் நடந்த சாரு நிவேதிதா வாசகர் வட்ட சந்திப்பிற்கு பிறகு நான் முக நூலில் இட்ட இடுகைகளை ஒன்றாக இணைத்து இங்கு வெளிடுகிறேன்....
வாசகர் வட்ட சந்திப்பு - 1
என்
கால்களின் வலியை மறந்து ஆடிய ஆட்டம்... மற்றவர்களின் முன்னால் பேச கூட
கூச்சபடும் நான்...எப்படி ஆடினேன் என்பதை இன்னும் நினைத்து நினைத்து
மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன்... சாரு தமிழ் பாடல்களுக்கு ஆடியதுதான்
எல்லோருக்கும் ஆச்சர்யம் ...
வாசகர் வட்ட சந்திப்பு - 2
பிச்சைகாரன்
சொன்னது 100% உண்மை... ஒரு ஜென் குரு போலத்தான் அவர் வந்திறங்கினார்...
சபரிமலை போய்வந்த பரவஸம் அவர் முகத்தை நிறைத்திருந்தது. அவர் பக்கத்தில்
உட்கார இடம் பிடித்தபோது... பிச்சைகாரன் மற்றும் மணி போன்ற வாசகர்கள் எதை
பற்றியும் யோசிக்காமல் சாருவின் காலருகில் அமர்ந்தார்கள்,.. என்னை நானே
நொந்துகொண்டேன்--- அவர்களின் உண்மையான காதலையும் என் மேதாவிதனத்தை
நினைத்துக்கொண்டும்...
வாசகர் வட்ட சந்திப்பு - 3
எதிர்பார்த்த
கேள்விகள் வாசகர் கூட்டத்தில் இருந்து வர வர எதிர்பார்க்காத பதில்கள்
சாருவிடமிருந்து வந்து கொண்டே இருந்தன... ஒரு கட்டத்தில் மதிய உணவை மறந்து
கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில் "LUNCH BREAK " விடலாமா? என்று
சாருவே கேட்கும்வகையில் வாசகர்களின் அறிவுக்கு தீனியாய் அமைந்தன அந்த
நிமிடங்கள் (ஆமாம் நிமிடம்தான்...எவ்வளவு பேசினாலும் காலம் நேரமே
தெரியமாட்டேஙுது)
வாசகர் வட்ட சந்திப்பு - 4
மதிய
உணவு வந்த பிறகு, மாடியில் இருக்கும் ஹாலில் பந்தி நடந்துது... கல்யாண
வீட்டில் நடப்பது போல் நடக்காமல் அடுத்தவருக்கு எந்த விதத்தில் உதவலாம்
என்பது போலவே அந்த உணவு பகிர்தல் இனிதே நடந்தேறியது...இதில் வெங்கட்
கார்திகேயனின் பங்கு சொல்லில் அடங்காதது... மேல் மாடியில் இது
நடந்துகொன்டிருக்கும் வேளையில்.. கீழ்த் தளத்தில் எங்கள் அதிரடி ஆட்டம்
ஆரம்பமானது... ஹ ஹ ஹா...
வாசகர் வட்ட சந்திப்பு - 5
செல்வம்
மாணிக்கத்தை தனியாக தள்ளிக்கொண்டு சென்று (தப்பா நினைக்காதிங்க பாஸ்)என்
தாகத்தை தணிக்க வேண்டினேன். அவர் பாஸ்கரை சந்தித்து தணிக்குமாரு
ஆவனச்செய்தார். மூவரும் கீழ் தளத்தில் இருக்கும் அறைக்கு சென்றோம்...
பார்திபன் செய்த தவத்தினால் பாண்டிசேரியிலிருந்து நான்கு போத்தல்கள்
வந்திருந்தன... SM-எந்தவித யீகோவும் இல்லாமல்.. ஒரு கோப்பையை நிறைத்து,
தண்ணியா கூல்ட்ரின்க்ஸா என்றார்... எதற்கு குழப்பமென நான்
கூல்ட்ரின்க்ஸயும் பாஸ்கர் தண்ணியையும் ஊற்றிக்கொண்டு.... """ சியர்ஸ் """
என்று கத்தினோம்...
வாசகர் வட்ட சந்திப்பு - 6
"""சியர்ஸ்"""
என்று கத்தி முடித்து,, இரண்டு மிடறு குடித்த வேளையில்.. நிதானமாய் சாரு
உள்ளே வந்தார்..அவரிடம் இருந்த கோப்பையில் ஒயின் நிறைந்திருந்தது..ஆலிவ்
காய்களை அவர் உண்ணும் விதமே அலாதிதான்.இதற்குள் மேலே பந்தி முடியும்
தருவாயில் அடுத்த ஷெஷனுக்கான பரபரப்பு அனைவரையும் தொற்றிக்கொண்டது... சாரு
எங்களை பார்த்து சொன்னார் "" இன்னும் ஒரு பெக்"" நாங்கள் எங்களை மறந்து
சிரித்தோம் ஏதோ கானகத்தில் இருப்பது போல...
வாசகர் வட்ட சந்திப்பு - 7
இந்த
பரபரப்புக்கு நடுவில் பரபரப்பே இல்லாமல் ஒருவர் காரில் வந்திறங்கினார்
அவர் பெயர் யாதென்று யாரும் கனிக்கமுடியாமல் ஓல்ட் மாங்க் குடித்த
அராத்துகளை போலவே விழிபிதுங்கி நின்றோம்.ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டே
தனது பக்கத்து வீட்டு நண்பர்களிடம் பேசுவது போல பேச ஆரம்பித்ததும்
சீனிவாஸனை (திருப்பதி ஸீனிவாஸனை) நினைத்துக்கொண்டேன்.அவரின் முக பாவத்தை
விளக்க நான் வென்கட்ராமன் கார்திகேயனின் வார்தைகளை நினைவு கூர்கிறேன்
"அடுத்த வினாடி சிரித்து விடுவார்" என்பதை போன்ற முகம்...
வாசகர் வட்ட சந்திப்பு - 8
26-ம்
தேதியே தாம்பரத்தில் சிபி-யை பிக் அப் செய்யும்மாறு தளபதி ஆணையிட்டார்.
யார் அவர் என்ற யோசனையில் இருந்த எனக்கு பேரதிர்சி காத்திருந்தது, ஆம் அவர்
ஆனந்த விகடனின் மாணவப் பத்திரிகையாளர். அங்கு கேட்ட கேள்விகள் எளிதில்
சாருவிடம் கேட்க முடியாத கேள்விகள்,..(1)ஒரு எழுத்தளாராகுவதற்கு என்ன செய்ய
வேண்டும்?, (2)உங்களை எழுத தூன்டுவது எது?, (3)நீங்கள் எழுதிய
புத்தகத்தில் காதலைப் பற்றி இரு வேறு
பதில்கள் எழுதியிறுக்கிறீர்களே? (4) வலது காதில் எதற்கு கடுக்கன்? மேலும்
இது போன்ற குறு குறு கேள்விகளை அவரும் ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர்
திட்டத்தில் புகைப்பட நிபுணராக தேர்வாகியிருக்கிற சரவணகுமார் என்ற நண்பரும்
கேட்டனர்,... இங்கு சொன்ன அனைத்து கேள்விகளுக்கும் பதில்
விரைவில்...(வென்கட் கார்த்திகேயன் சரிதானே)
வாசகர் வட்ட சந்திப்பு - 9
இரண்டாவது
ஷெஷன் முடியும் தருவாயில் கையில் பத்திரமாய் வைத்திருந்த
ராஸலீலாவிலிருந்து ஒரு பத்தியை உறக்க படித்தேன் "என்னிடம் நீங்கள் பின்
நவீனத்துவ கதைகளை எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்,ஏனென்றால்
என் கதைகள் திட்டங்களின் பேரில் உருவாதில்லை"- (ராஸலீலா-பக்கம்-234)- சில
ஷனங்கள் கனத்த மௌனத்திற்கு பிறகு அனைவரது முகத்திலும் புன்முறுவல்...
வாசகர் வட்ட சந்திப்பு -10
இரண்டாவது செஷன் முடிந்தவுடன் அனைவரும் போட்டோ சேஷன் -க்காக வெளியே
இருக்கும் புல்வெளிக்கு சென்றோம், பல கேமராக்களும்,செல் போன்களும் சிணுங்க
போட்டோக்கள் எடுத்தோம். நேரம் செல்ல செல்ல எங்களது தாகம்
அதிகரித்துக்கொண்டே இருந்தது...போத்தல்கள் உடைக்கப்பட்டன, ரெமி மார்டின்
திறக்கப்பட்டது, ஆடைகள் களைந்து நீச்சல் குளத்தில் விழுந்தோம்... வாழ்வின்
மறக்க முடியாத பல நிகழ்வுகள் இனிமேல்தான் நடைபெற போகிறது என்பதை நாங்கள்
ஒருவரும் அறிந்திருக்கவில்லை ...
வாசகர் வட்ட சந்திப்பு -11
சாரு
நீச்சல் உடையுடன் வெளியே வந்தார் ... வில்லன்,பாஸ்கர்,செல்வம்,பிரபு
ராஜ்,சீனி மற்றும் பல நண்பர்கள் சாருவுடன் நீந்தினோம் ... பல கேள்விகள்...
அனாயசமாய் வெளி வரும் பதில்கள் என்று சுயம் மறந்த சிரிப்புடன்
கேட்டுக்கொண்டிருந்தோம். Book of fusos, Anna Hazare, The Book of hazards,
ம பு, குமாஸ்தா வேலை-- போன்ற பல விஷயங்கள்... மெல்லிதாய் தூறல் விழுந்து
கொண்டிருந்தது .. இருந்தும் நனைந்து கொண்டே நீந்தினோம்... இந்த போட்டோவை
பாருங்கள் நான் எவ்வளவு உரிமையுடன் சாருவின் மேல் கைகளை
போட்டுகொண்டிருக்கிறேன்... எனக்கு சாருவிடம் பிடித்ததும் இதுதான், ஒரு குரு
போல எண்ணி அவர் பேசுவதை கை கட்டிகொண்டு கேட்க முடியும், கை கோர்த்து
அவருடன் நடனமாட முடியும் , தகப்பனாய் நினைத்து கேள்வி கேட்க முடியும்,
அன்னை போல் ஆரத்தழுவ முடியும்... இதில் நான் சொல்லும் எதுவும் இமி அளவு கூட
மிகைப்படுத்தாதது... மிகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதது...