மூன்றாவது வாசகர் வட்ட சந்திப்பு ...சில குறிப்புகள் ...
1 . நிறைய புது வாசகர்கள் கலந்து கொண்டனர் ... (இதில் புது என்பது முதல்
முறை கலந்து கொண்டவர்களை குறிக்கும் ... மற்ற படி அவர்கள் பல வருடமாக
சாருவை படித்து வருபவர்கள்)
2 . மூறு மணி நேரத்திற்கும் மேலாக அறிமுகப்படலம் நடந்தது சந்தோஷமாக இருந்தது (இடையிடையே சாருவின் பேச்சு ரசிக்கவைத்தது)
3 . பிச்சைகாரன் இல்லாத குறையை பார்த்திபன் போக்கினார் (நோட்ஸ் எடுத்ததைத்தான் சொல்றேன் ... ஆனா பப்ளிஷ் செஞ்ச மாதிரி தெரியல)
4 . செல்வமும் நானும் ஸ்பீக்கர் பாக்ஸ் தேடி அலைந்து வாங்கினோம்...
நன்றாகவே உபயோகப்பட்டது ...(இதை வாங்கும் கடையில் ஒரு வெளிநாட்டு பெண்
என்னை பார்த்து சிரித்தது ஒரு ஸ்கூப் செய்தி)
5 . என்னை பற்றிய கிசு
கிசுவை உண்டாக்கியவர்களுக்கு நன்றி ... (என்னுடைய statement இந்த அளவுக்கு
ரகளையை உண்டாக்கும் என்று எதிர்பார்கவில்லை... ஆனால் இதை நான் சொன்னது
முதல் வாசகர் வட்ட சந்திப்பில் என்பதை நினைவு கூர்கிறேன்)
6 . அராத்து
எப்போதும் போல பல விஷயங்களை தெளிவுபடுத்தி ... முடிவெடுக்க வைத்தார் ...
(அவரும் என்னைபோலவே HR field -ல் இருப்பது சந்தோஷம்)
7 .நீங்கள்
எப்போது எழுத ஆரம்பித்தீர்கள் என்ற மொக்கை கேள்விக்கு சாரு சொன்ன பதிலை
கேட்டால் எவனும் அதை திருப்பி கேட்கமாட்டான் ( உங்களுக்கு எப்போது குறி
விறைக்க ஆரம்பித்தது என்று நினைவிருக்கிறதா???)
8 .சாருவின் இசை விமர்சனங்கள் எப்போதும் போல ரசிக்க வைத்தன ...
9 . சந்திப்பில் ஒரு இயக்குனரும் கலந்து கொண்டார் ... அவரின் முதல்
படத்துக்கு சாருதான் டயலாக் எழுத வேண்டும் என்று அன்புடன் ஆணையிட்டார்
(விரைவில் அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல
இறைவனை இறைஞ்சுகிறேன்)
10 .செல்வம் சாருவை காப்பாற்றுவதாய் நினைத்து
மூக்கை பதம் பார்த்ததும்... எந்த வித விகல்பமும் இன்றி சாரு உடை
மாற்றியதும் பழைய கதை ... குளிரில் நான் கடல் நீரிலேயே பிஸ் அடித்தது
யாரும் அறியாத புது கதை ...
11 . இரவு நீண்ட நீரம் விவாதம் தொடர்ந்தது ... (நான் புல் மப்பில் இருந்ததால் பாதியிலேயே தூங்க சென்று விட்டேன்...)
12 . அன்பின் மிகுதியால் தளபதியை கட்டியணைத்து முத்தம் கொடுக்க முயன்றேன்
...முடியாததால் அவரின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தேன் ...(இந்த
நிகழ்ச்சி காலையில் தளபதி சொல்லித்தான் தெரிந்தது... எனக்கும் short time
memory loss -வோ என்று ஐயப்பட வைத்தது...)
13 . சாருவின் இருப்பு எல்லோரையும் ... எல்லா கணங்களையும் சந்தோஷமாக்கியது...
14 . டிசம்பர் - மாத நிகழ்ச்சி நிரலை பற்றிய பலமுடிவுகள் எடுக்கப்பட்டன
... (அராத்து சொன்ன மாதிரி செயல் வீரர்கள் தாங்கள் ஒத்து கொண்ட செயல்களை
செய்தாலே நிகழ்ச்சி மிக பெரிய success ....)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக