செவ்வாய், 18 அக்டோபர், 2011

சாரு என் காதலன் ...

மூன்றாவது வாசகர் வட்ட சந்திப்பு ...சில குறிப்புகள் ...
1 . நிறைய புது வாசகர்கள் கலந்து கொண்டனர் ... (இதில் புது என்பது முதல் முறை கலந்து கொண்டவர்களை குறிக்கும் ... மற்ற படி அவர்கள் பல வருடமாக சாருவை படித்து வருபவர்கள்)
2 . மூறு மணி நேரத்திற்கும் மேலாக அறிமுகப்படலம் நடந்தது சந்தோஷமாக இருந்தது (இடையிடையே சாருவின் பேச்சு ரசிக்கவைத்தது)
3 . பிச்சைகாரன் இல்லாத குறையை பார்த்திபன் போக்கினார் (நோட்ஸ் எடுத்ததைத்தான் சொல்றேன் ... ஆனா பப்ளிஷ் செஞ்ச மாதிரி தெரியல)
4 . செல்வமும் நானும் ஸ்பீக்கர் பாக்ஸ் தேடி அலைந்து வாங்கினோம்... நன்றாகவே உபயோகப்பட்டது ...(இதை வாங்கும் கடையில் ஒரு வெளிநாட்டு பெண் என்னை பார்த்து சிரித்தது ஒரு ஸ்கூப் செய்தி)
5 . என்னை பற்றிய கிசு கிசுவை உண்டாக்கியவர்களுக்கு நன்றி ... (என்னுடைய statement இந்த அளவுக்கு ரகளையை உண்டாக்கும் என்று எதிர்பார்கவில்லை... ஆனால் இதை நான் சொன்னது முதல் வாசகர் வட்ட சந்திப்பில் என்பதை நினைவு கூர்கிறேன்)
6 . அராத்து எப்போதும் போல பல விஷயங்களை தெளிவுபடுத்தி ... முடிவெடுக்க வைத்தார் ... (அவரும் என்னைபோலவே HR field -ல் இருப்பது சந்தோஷம்)
7 .நீங்கள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள் என்ற மொக்கை கேள்விக்கு சாரு சொன்ன பதிலை கேட்டால் எவனும் அதை திருப்பி கேட்கமாட்டான் ( உங்களுக்கு எப்போது குறி விறைக்க ஆரம்பித்தது என்று நினைவிருக்கிறதா???)
8 .சாருவின் இசை விமர்சனங்கள் எப்போதும் போல ரசிக்க வைத்தன ...
9 . சந்திப்பில் ஒரு இயக்குனரும் கலந்து கொண்டார் ... அவரின் முதல் படத்துக்கு சாருதான் டயலாக் எழுத வேண்டும் என்று அன்புடன் ஆணையிட்டார் (விரைவில் அவருக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்)
10 .செல்வம் சாருவை காப்பாற்றுவதாய் நினைத்து மூக்கை பதம் பார்த்ததும்... எந்த வித விகல்பமும் இன்றி சாரு உடை மாற்றியதும் பழைய கதை ... குளிரில் நான் கடல் நீரிலேயே பிஸ் அடித்தது யாரும் அறியாத புது கதை ...
11 . இரவு நீண்ட நீரம் விவாதம் தொடர்ந்தது ... (நான் புல் மப்பில் இருந்ததால் பாதியிலேயே தூங்க சென்று விட்டேன்...)
12 . அன்பின் மிகுதியால் தளபதியை கட்டியணைத்து முத்தம் கொடுக்க முயன்றேன் ...முடியாததால் அவரின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்தேன் ...(இந்த நிகழ்ச்சி காலையில் தளபதி சொல்லித்தான் தெரிந்தது... எனக்கும் short time memory loss -வோ என்று ஐயப்பட வைத்தது...)
13 . சாருவின் இருப்பு எல்லோரையும் ... எல்லா கணங்களையும் சந்தோஷமாக்கியது...
14 . டிசம்பர் - மாத நிகழ்ச்சி நிரலை பற்றிய பலமுடிவுகள் எடுக்கப்பட்டன ... (அராத்து சொன்ன மாதிரி செயல் வீரர்கள் தாங்கள் ஒத்து கொண்ட செயல்களை செய்தாலே நிகழ்ச்சி மிக பெரிய success ....)

புதன், 31 ஆகஸ்ட், 2011

சாரு நிவேதிதா என் நண்பன்...

  ஆகத்து 27-ம் நாள் நடந்த சாரு நிவேதிதா வாசகர் வட்ட சந்திப்பிற்கு பிறகு நான் முக நூலில் இட்ட இடுகைகளை ஒன்றாக இணைத்து இங்கு வெளிடுகிறேன்....
வாசகர் வட்ட சந்திப்பு - 1
என் கால்களின் வலியை மறந்து ஆடிய ஆட்டம்... மற்றவர்களின் முன்னால் பேச கூட கூச்சபடும் நான்...எப்படி ஆடினேன் என்பதை இன்னும் நினைத்து நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொள்கிறேன்... சாரு தமிழ் பாடல்களுக்கு ஆடியதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம் ...
வாசகர் வட்ட சந்திப்பு - 2
பிச்சைகாரன் சொன்னது 100% உண்மை... ஒரு ஜென் குரு போலத்தான் அவர் வந்திறங்கினார்... சபரிமலை போய்வந்த பரவஸம் அவர் முகத்தை நிறைத்திருந்தது. அவர் பக்கத்தில் உட்கார இடம் பிடித்தபோது... பிச்சைகாரன் மற்றும் மணி போன்ற வாசகர்கள் எதை பற்றியும் யோசிக்காமல் சாருவின் காலருகில் அமர்ந்தார்கள்,.. என்னை நானே நொந்துகொண்டேன்--- அவர்களின் உண்மையான காதலையும் என் மேதாவிதனத்தை நினைத்துக்கொண்டும்...
வாசகர் வட்ட சந்திப்பு - 3
எதிர்பார்த்த கேள்விகள் வாசகர் கூட்டத்தில் இருந்து வர வர எதிர்பார்க்காத பதில்கள் சாருவிடமிருந்து வந்து கொண்டே இருந்தன... ஒரு கட்டத்தில் மதிய உணவை மறந்து கேள்வி பதில் சென்று கொண்டிருக்கையில் "LUNCH BREAK " விடலாமா? என்று சாருவே கேட்கும்வகையில் வாசகர்களின் அறிவுக்கு தீனியாய் அமைந்தன அந்த நிமிடங்கள் (ஆமாம் நிமிடம்தான்...எவ்வளவு பேசினாலும் காலம் நேரமே தெரியமாட்டேஙுது)
வாசகர் வட்ட சந்திப்பு - 4
மதிய உணவு வந்த பிறகு, மாடியில் இருக்கும் ஹாலில் பந்தி நடந்துது... கல்யாண வீட்டில் நடப்பது போல் நடக்காமல் அடுத்தவருக்கு எந்த விதத்தில் உதவலாம் என்பது போலவே அந்த உணவு பகிர்தல் இனிதே நடந்தேறியது...இதில் வெங்கட் கார்திகேயனின் பங்கு சொல்லில் அடங்காதது... மேல் மாடியில் இது நடந்துகொன்டிருக்கும் வேளையில்.. கீழ்த் தளத்தில் எங்கள் அதிரடி ஆட்டம் ஆரம்பமானது... ஹ ஹ ஹா...
 வாசகர் வட்ட சந்திப்பு - 5
செல்வம் மாணிக்கத்தை தனியாக தள்ளிக்கொண்டு சென்று (தப்பா நினைக்காதிங்க பாஸ்)என் தாகத்தை தணிக்க வேண்டினேன். அவர் பாஸ்கரை சந்தித்து தணிக்குமாரு ஆவனச்செய்தார். மூவரும் கீழ் தளத்தில் இருக்கும் அறைக்கு சென்றோம்... பார்திபன் செய்த தவத்தினால் பாண்டிசேரியிலிருந்து நான்கு போத்தல்கள் வந்திருந்தன... SM-எந்தவித யீகோவும் இல்லாமல்.. ஒரு கோப்பையை நிறைத்து, தண்ணியா கூல்ட்ரின்க்ஸா என்றார்... எதற்கு குழப்பமென நான் கூல்ட்ரின்க்ஸயும் பாஸ்கர் தண்ணியையும் ஊற்றிக்கொண்டு.... """ சியர்ஸ் """ என்று கத்தினோம்...
வாசகர் வட்ட சந்திப்பு - 6
"""சியர்ஸ்""" என்று கத்தி முடித்து,, இரண்டு மிடறு குடித்த வேளையில்.. நிதானமாய் சாரு உள்ளே வந்தார்..அவரிடம் இருந்த கோப்பையில் ஒயின் நிறைந்திருந்தது..ஆலிவ் காய்களை அவர் உண்ணும் விதமே அலாதிதான்.இதற்குள் மேலே பந்தி முடியும் தருவாயில் அடுத்த ஷெஷனுக்கான பரபரப்பு அனைவரையும் தொற்றிக்கொண்டது... சாரு எங்களை பார்த்து சொன்னார் "" இன்னும் ஒரு பெக்"" நாங்கள் எங்களை மறந்து சிரித்தோம் ஏதோ கானகத்தில் இருப்பது போல...
வாசகர் வட்ட சந்திப்பு - 7
இந்த பரபரப்புக்கு நடுவில் பரபரப்பே இல்லாமல் ஒருவர் காரில் வந்திறங்கினார் அவர் பெயர் யாதென்று யாரும் கனிக்கமுடியாமல் ஓல்ட் மாங்க் குடித்த அராத்துகளை போலவே விழிபிதுங்கி நின்றோம்.ஒரு சிகரெட்டை பற்றவைத்துக்கொண்டே தனது பக்கத்து வீட்டு நண்பர்களிடம் பேசுவது போல பேச ஆரம்பித்ததும் சீனிவாஸனை (திருப்பதி ஸீனிவாஸனை) நினைத்துக்கொண்டேன்.அவரின் முக பாவத்தை விளக்க நான் வென்கட்ராமன் கார்திகேயனின் வார்தைகளை நினைவு கூர்கிறேன் "அடுத்த வினாடி சிரித்து விடுவார்" என்பதை போன்ற முகம்...
வாசகர் வட்ட சந்திப்பு - 8

26-ம் தேதியே தாம்பரத்தில் சிபி-யை பிக் அப் செய்யும்மாறு தளபதி ஆணையிட்டார். யார் அவர் என்ற யோசனையில் இருந்த எனக்கு பேரதிர்சி காத்திருந்தது, ஆம் அவர் ஆனந்த விகடனின் மாணவப் பத்திரிகையாளர். அங்கு கேட்ட கேள்விகள் எளிதில் சாருவிடம் கேட்க முடியாத கேள்விகள்,..(1)ஒரு எழுத்தளாராகுவதற்கு என்ன செய்ய வேண்டும்?, (2)உங்களை எழுத தூன்டுவது எது?, (3)நீங்கள் எழுதிய புத்தகத்தில் காதலைப் பற்றி இரு வேறு பதில்கள் எழுதியிறுக்கிறீர்களே? (4) வலது காதில் எதற்கு கடுக்கன்? மேலும் இது போன்ற குறு குறு கேள்விகளை அவரும் ஆனந்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் புகைப்பட நிபுணராக தேர்வாகியிருக்கிற சரவணகுமார் என்ற நண்பரும் கேட்டனர்,... இங்கு சொன்ன அனைத்து கேள்விகளுக்கும் பதில் விரைவில்...(வென்கட் கார்த்திகேயன் சரிதானே)
வாசகர் வட்ட சந்திப்பு - 9
இரண்டாவது ஷெஷன் முடியும் தருவாயில் கையில் பத்திரமாய் வைத்திருந்த ராஸலீலாவிலிருந்து ஒரு பத்தியை உறக்க படித்தேன் "என்னிடம் நீங்கள் பின் நவீனத்துவ கதைகளை எதிர்பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்,ஏனென்றால் என் கதைகள் திட்டங்களின் பேரில் உருவாதில்லை"- (ராஸலீலா-பக்கம்-234)- சில ஷனங்கள் கனத்த மௌனத்திற்கு பிறகு அனைவரது முகத்திலும் புன்முறுவல்...
வாசகர் வட்ட சந்திப்பு -10
இரண்டாவது செஷன் முடிந்தவுடன் அனைவரும் போட்டோ சேஷன் -க்காக வெளியே இருக்கும் புல்வெளிக்கு சென்றோம், பல கேமராக்களும்,செல் போன்களும் சிணுங்க போட்டோக்கள் எடுத்தோம். நேரம் செல்ல செல்ல எங்களது தாகம் அதிகரித்துக்கொண்டே இருந்தது...போத்தல்கள் உடைக்கப்பட்டன, ரெமி மார்டின் திறக்கப்பட்டது, ஆடைகள் களைந்து நீச்சல் குளத்தில் விழுந்தோம்... வாழ்வின் மறக்க முடியாத பல நிகழ்வுகள் இனிமேல்தான் நடைபெற போகிறது என்பதை நாங்கள் ஒருவரும் அறிந்திருக்கவில்லை ...
வாசகர் வட்ட சந்திப்பு -11
சாரு நீச்சல் உடையுடன் வெளியே வந்தார் ... வில்லன்,பாஸ்கர்,செல்வம்,பிரபு ராஜ்,சீனி மற்றும் பல நண்பர்கள் சாருவுடன் நீந்தினோம் ... பல கேள்விகள்... அனாயசமாய் வெளி வரும் பதில்கள் என்று சுயம் மறந்த சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்தோம். Book of fusos, Anna Hazare, The Book of hazards, ம பு, குமாஸ்தா வேலை-- போன்ற பல விஷயங்கள்... மெல்லிதாய் தூறல் விழுந்து கொண்டிருந்தது .. இருந்தும் நனைந்து கொண்டே நீந்தினோம்... இந்த போட்டோவை பாருங்கள் நான் எவ்வளவு உரிமையுடன் சாருவின் மேல் கைகளை போட்டுகொண்டிருக்கிறேன்... எனக்கு சாருவிடம் பிடித்ததும் இதுதான், ஒரு குரு போல எண்ணி அவர் பேசுவதை கை கட்டிகொண்டு கேட்க முடியும், கை கோர்த்து அவருடன் நடனமாட முடியும் , தகப்பனாய் நினைத்து கேள்வி கேட்க முடியும், அன்னை போல் ஆரத்தழுவ முடியும்... இதில் நான் சொல்லும் எதுவும் இமி அளவு கூட மிகைப்படுத்தாதது... மிகைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதது...
 
 
 
 

வெள்ளி, 14 ஜனவரி, 2011

சில வருத்தங்கள் ,,, சில நிகழ்வுகள் ...

      சிறிது நாட்களுக்கு எந்த இடுகையும் இல்லாமலே பகிர்வு என்ற திரையில் ஒளிந்திருந்தேன், காரணம் என் நலனில் அக்கறை உள்ளவரும், என் நண்பருமானவர், என் பதிவுகளை படித்துவிட்டு, உங்களுக்கு சில அதிகார மையங்களிலிருந்து மிரட்டலோ, அடியோ விழும் என கணித்து சொன்னார், நானும் சம்சயம் கொண்டவனாய் சில நாட்கள் தேமே என்று நிகழ்வுகளை கவனித்து வந்தேன்.

அவருக்கு தெரியாது போலும், இங்கே, கோடிகளை கொள்ளை அடிப்பவன் கூட சிரித்துக் கொண்டுதான் பேட்டி கொடுப்பானென்று, சிறு பிள்ளையை கழுத்தை நெறித்து பெட்டியில் அடைத்தவளுக்கு  அறுபதாயிரம் சம்பளமென்று, சக மனிதனை சாரயத்திற்க்காக கொள்பவர்கள் கூட உண்டென்று ,பதவிக்காக பெற்ற மகளை கூட வேசியாக்குவார்கள் என்று ...

மனம் கனக்கிறது ... சில விஷயங்களை ... நான் சுயம் இழந்தால் மட்டுமே வெளியிடமுடியுமென்று நன்றாக புரிகிறது ....

திரு.ஞானியின் பதிவை தயவு செய்து படியுங்கள் ... நேற்று புத்தக சந்தையில் ஞானியை அவரது ஞானபானு பதிப்பக ஸ்டாலில் பார்த்தேன் ... மிகுந்த நட்பு பெருகி மனம் நெகிழ்ந்ததால் பேசாமல் தனியே வந்து விட்டேன், அவரை பார்த்து கை குலுக்குவதோ, அவரின் செயல்களுக்கு பாராட்டு தெரிவிப்பதோ என்னை பொறுத்த வரை வேண்டாத வேலை,.. செய்கை மட்டுமே அவரின் எண்ணங்களுக்கு நான் செய்யும் பதிலாற்றுவதாக இருக்க முடியும் .. ஏனென்றால் இந்த இணைப்பில் உள்ள பதிவை படித்து விட்டு ... அவரின் வணக்கம் முகப்பை படியுங்கள் ... புரியும் ...

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்……. « திண்ணை - ஞானி
 

வியாழன், 30 டிசம்பர், 2010

பகிர்வு -- நிகழ்வு

சாரு நிவேதிதா - ப்லோக்ளிருந்து......

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் வெளியீட்டு விழா

ஜனவரி 1 ஆந்தேதி மாலை உயிர்மை பதிப்பகம் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துயில்நாவலின் வெளியீட்டு விழாவினை சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடத்துகிறது. நாவலைப் பற்றிய சிறப்பு விவாதம் ஒன்றும் நடக்கவிருக்கிறது.
முழுவிபரம்
உயிர்மை வெளியீட்டு அரங்கு: 5
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்
நாள்: 1.1.2011 புத்தாண்டு தினம், நேரம்: மாலை 6 மணி,
இடம்: இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய்ய நூலகம், (LLA Building),
735, அண்ணா சாலை , சென்னை
துயில்
எஸ்.ராமகிருஷ்ணன்
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்
நாவல் அறிமுகம்: சித்ரா
தலைமை: இந்திரா பார்த்தசாரதி
முதல் பிரதி பெறுவோர்:
P.A. அசோக், அறநிலையத் துறை இணை இயக்குனர் கோவை
திருமூர்த்தி, அமெரிக்கா
சிறப்புரை:
நாவல் எனும் சஞ்சாரம்
எஸ்.ராமகிருஷ்ணன்
கலந்துரையாடல் அரங்கு:
டாக்டர் ருத்ரன்
தமிழவன்
.முருகேச பாண்டியன்
யுவன் சந்திரசேகர்

சிறப்பு அழைப்பாளர்கள்
இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி
இயக்குனர் முரளிஅப்பாஸ்
இயக்குனர் குமரவேல்
இயக்குனர் ஹோசிமின்
இயக்குனர் மணிகண்டன்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

படித்ததில் இனித்தது

இனி வரும் சில பதிவுகளில், நான் படித்து சிலாகித்த பல வலைபூக்களின் செய்திகளை பகிர்வேன், இதோ அன்பிற்குரிய நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது ... அதை பற்றிய பத்ரியின் - இடுகை (இணைப்பில்)


http://thoughtsintamil.blogspot.com/2010/12/2010.html