எந்திரன் - விமர்சனம் என்ற உடனே, படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகா!! என யாராவது வாயை பிளந்தால் நான் பொறுப்பல்ல, ஏனெனில் எனக்கு விஷேஷ தகுதியுண்டு, யாதெனில் நான் இன்னமும் எந்திரனை பார்க்கவில்லை, படமே பார்க்காமல் விமர்சனமா-உங்கள் கேள்விகள் என் காதில் விழுகிறது, என் பதில் ஆம்,
ஒவ்வொரு விமர்சகரும் தங்களுடைய அளவு கோல்கள் மூலம் அப் படத்தை இகழ்ந்தும், புகழ்ந்தும் பந்தாட, நான் எனக்கே உரிய கோல்களை கொண்டு அளக்க முற்பட்டதன் விளைவு, இந்த பத்தி,
சமீபத்தில் மாநகராட்சி அந்தஸ்து கொடுத்து அழகு பார்த்த நகரம், கிட்ட தட்ட 25 - க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்னகத்தே கொண்டு வேலூர் மக்களின் கலை பசியை போக்கி வருகிறது, இதில் பல திரையரங்குகள் காதலர்களுக்கும், காமுகர்களுக்கும் எழுதப்படாத சரணாலயமாக மாறிபோயிருக்கும் வேளையில், எந்திரன் என்ற வெகுஜன ரசிகர்களுக்காக எடுக்க பட்ட படம் சக்கை போடு போடுகிறதாக கேள்வி, அனைத்து சென்டர்களிலும் பல கோடிகளை அள்ளிய இப்படம் கண்டிப்பாக வணிக ரீதியில் தோல்விப்படம் கிடையாது ஆனால் இது நல்ல படமா என்பதை பற்றிதான் கேள்வியே.,,
எங்கள் ஊரில் ப்ளு என்று ஒரு திரையரங்கு உள்ளது, அதன் விசேஷம் என்னவெனில், வேலூரில் ரிலீஸ் செய்த என்ன படமானாலும் அதன் இரண்டாம் வெளியீடு இந்த தியேட்டரில்தான், ஒரு படம் வெளியாகி இந்த ப்ளு தியேட்டருக்கு எத்தனை நாட்கள் கழித்து வருகிறது, என்பதை பொறுத்துதான் அந்த படத்தின் வெற்றி என்னை பொறுத்தவரை தீர்மானிக்கப்படுகிறது,இதோ உலகமே கொண்டாடிய (அல்லது கொண்டாட நிர்பந்திக்கப்பட்ட ) எந்திரன் எங்கள் தியேட்டருக்கு மிக சீக்கிரத்தில் வந்து சேர்ந்த்தது (நீங்களே யூகித்துகொள்ளவும்) , அதன் வசூல் சொல்ல வேண்டியதில்லை, தமிழ் நாட்டை கூறு போட்டு சுரண்டி ஊழல் புரிந்த , புரிகிற , நபர்களையும் , நபரையும் தன்னகத்தே கொண்ட பல கட்சிகளில், இன்று நாட்டை ஆளும் கட்சியின் மற்றும் குடும்பத்தாரின் மற்றுமொரு பரிமாணம் "தயாரிப்பாளர்கள்" . இளைய வயது பையன்களெல்லாம் கோடிகளில் படமேடுத்துக்கொண்டிருக்க மூத்தவர் 150 கோடியில் படமெடுப்பது ஆச்சர்யத்துக்குரியதல்ல,
எந்திரன் - பாடல்கள் கேட்கும் வண்ணமில்லை , காது குடைகிறது , தொலைக்காட்சியில் போடும் கிளிப்ஸ் - பார்க்க தூண்டுவதாயில்லை , மேலும் பேட்டியே கொடுக்காத மற்றும் தன் சொந்த படத்துக்கு கூட பேசாத ரஜினி -யை கிட்டத்தட்ட எந்திரனின் வியாபார விநியோகஸ்தராக மாற்றிய பெருமை சன் பிச்சர்ஸ் -க்கு உண்டு . ஐஸ்வர்யா - நாற்பதை தொட போகிற வயதிலும் திரையில் அழகாக தெரிகிறார் (நடிப்பில் ???).
பல இணையவாதிகள் தங்கள் ப்ளாக் -களில் , எந்திரனை கிழி கிழி என கிழித்தும் , காது கூசும் அளவுக்கு புகழ்ந்தும் தள்ளியிருக்கும் நேரத்தில் , படமே பார்க்காமல் நான் எழுதியிருக்கும் இவ் விமர்சனம் சற்று வித்தியாசம்தான் .
என் நண்பர் ஒருவர் கேட்டார் , எந்திரனை பார்த்தீர்களா ?
"இல்லை"
எப்போது பார்ப்பதாக உத்தேசம் ,
"அடுத்த தீபாவளியன்று சன் டி.வி - யில்"....
உண்மையான எந்திரன் யார் தெரியுமா ??? கீழே உள்ள இணைப்பை கிளிக்குங்கள் ....
http://www.youtube.com/watch?v=TxeMgj4kKIg
ஞாயிறு, 21 நவம்பர், 2010
சனி, 6 நவம்பர், 2010
புகைப்படங்கள் - நிஜங்களின் நிழல்கள்
இப்போதும் மற்றும் எப்போதும் மனிதனின் பழைய நினைவு கூறல்கள் காட்சியை சார்ந்த படிமங்களாகவே உள்ளன, எங்கே நீங்களே சோதித்து பாருங்கள், இசையை தவிர உங்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைவு கூற ஒரு மங்கிய அல்லது தெளிவான காட்சி தான் உங்கள் நியூரான்களில் ஒளிந்திருக்கும், அவைதான் அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒன்றாய் இணைத்து ஒரு சீரிய நாடகமாக்குகிறது.
ஒரு கொலைகாரனின் ரத்தம் தோய்ந்த கத்தி, தூங்கும் குழந்தையின் அழகிய முகம், ஒரு பெண்ணின் அரை நிர்வாணம், நீரோடை பிரவாகமுள்ள ஒரு இயற்கை சூழல். இவை அனைத்தையும் ஒரு புகைப்படமாக நீங்கள் பார்க்கும் பொழுது உங்களை அறியாமலே உங்கள் உடலும் மனமும் பதிலாற்றுவதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் பகுத்துணரமுடியாது.
வாழ்க்கையின் உன்னதமான தருணங்களை மீண்டும் அனுபவிக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு நவீன உபாயம் - புகைப்படங்கள். ஆம், அந்நிகரில்லா புகைப்படங்களை நாம் எப்போதும் ஞானபக சுழற்சிக்காகவே பயன்படுத்துகிறோம்.
எந்த ஒரு அசைவுமில்லாமல் வெறும் வண்ணங்களை கொண்ட உணர்ச்சியற்ற காகிதங்கள், நம் மனதில் ஏற்படுத்தும் உணர்சிகள் ஆயிரமாயிரம்.... சந்தேகமிருந்தால் உங்களின் பழைய ஆல்பங்களை புரட்டிபாருங்கள் ...
இந்த இணைப்பில் உள்ள புகைப்படங்கள் எந்த ஒரு நோக்கமுமில்லாமல், பல காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை....முடிந்தால் ரசியுங்கள் ...
ஒரு கொலைகாரனின் ரத்தம் தோய்ந்த கத்தி, தூங்கும் குழந்தையின் அழகிய முகம், ஒரு பெண்ணின் அரை நிர்வாணம், நீரோடை பிரவாகமுள்ள ஒரு இயற்கை சூழல். இவை அனைத்தையும் ஒரு புகைப்படமாக நீங்கள் பார்க்கும் பொழுது உங்களை அறியாமலே உங்கள் உடலும் மனமும் பதிலாற்றுவதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் பகுத்துணரமுடியாது.
வாழ்க்கையின் உன்னதமான தருணங்களை மீண்டும் அனுபவிக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு நவீன உபாயம் - புகைப்படங்கள். ஆம், அந்நிகரில்லா புகைப்படங்களை நாம் எப்போதும் ஞானபக சுழற்சிக்காகவே பயன்படுத்துகிறோம்.
எந்த ஒரு அசைவுமில்லாமல் வெறும் வண்ணங்களை கொண்ட உணர்ச்சியற்ற காகிதங்கள், நம் மனதில் ஏற்படுத்தும் உணர்சிகள் ஆயிரமாயிரம்.... சந்தேகமிருந்தால் உங்களின் பழைய ஆல்பங்களை புரட்டிபாருங்கள் ...
இந்த இணைப்பில் உள்ள புகைப்படங்கள் எந்த ஒரு நோக்கமுமில்லாமல், பல காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை....முடிந்தால் ரசியுங்கள் ...
வியாழன், 4 நவம்பர், 2010
ஒரு பாமரனின் வாழ்க்கை - பழகி விட்ட வாழ்க்கை
ஏங்கிக் கிடக்கையிலே
முதல் முத்தம் கொடுக்கையிலே
முயங்கிப் படுக்கையிலே
ஒரு துளியாய் நான் வந்தேன்
ஓங்காரமாகிப்புட்டேன்
என் தாயி கருக்குள்ளே
இருட்டு சிறைக்குள்ளே
எத்தனை நாள் மிதந்தேனோ
எனை மறந்து கிடந்தேனோ
கறுப்புக் குடங்குள்ளே
கருவழிஞ்சி போயிருந்தா
வரமோன்னு நினைச்சிருப்பேன்
வந்த வழி போயிருப்பேன்
உன் வயித்த கிழிச்சி என்னை
ஒத்தையிலே போட்டாலே
அந்த மருத்துவச்சி மண்டையிலே
மாடு ரெண்டும் முட்டுமோடி
தாய் பால குடிச்சிபுட்டு
தலைபுரண்டு கெடக்கயிலே
முலை பால முட்டி முட்டி
முங்கிக் குடிக்கையிலே
எனக்கேதும் தெரியாதே
என் தாயி இவதான்னு
சில நாள் பால் கொடுத்தே
பல நாள் பழம் கொடுத்தே
வெடுக்கென நிறுத்திபுட்டே
வெள்ளை சோறை நீட்டிபுட்டே
காசுன்ன தெரியாது
கடுகு வெலை கூட அறியாது
காலம் எனை கடக்கையிலே
காண்வென்டில் சேத்துப்புட்ட..
ஒன் , டு , த்ரீ - யும்
ஏ , பி , சி - யும்
ஏன்னே தெரியாம
ஏழு நாள் கத்திப்புட்டு
எனை மறந்து தூக்கத்துல
ஏதேதோ சொல்லி வைக்க
இங்கிலீசு பேசுறான் - எம்பையன்னு சொல்லிக்கிட்டு
ஏழூரு சொல்லிவச்ச, எனை வாரி முத்தம் வைச்ச ..
கருத்து தெரியும்முன்னே காலாண்டு பல கடந்தேன்
அரையாண்டு பரீட்ச்சை எல்லாம் அருவெறுப்பா எழுதிவச்சேன்
முழு ஆண்டு முடிப்பதற்குள் முழி பிதுங்கி போனதடி
பத்தாவது பாஸ் பண்ண பைத்தியம் தான் ஆனேனடி
கணக்கு சூத்திரமோ, காலனி ஆதிக்கமோ,
நியூட்டன் விதிகளோ, நியாண்டர்தால் மனிதனோ
புத்தகத்தில் உள்ளதெலாம் பொல பொல-னு குடிச்சிவச்சேன்
வந்தமர்ந்த தேர்வில் எல்லாம் வாந்தியாய் எடுத்து வச்சேன்
விலைவாசி தெரிஞ்சதில்லை
வீட்டு கஷ்டம் அறிஞ்சதில்ல
விளையாட்டா வாழ்க்கை போக ...
திடீர்னு வேலைக்கு போகச்சொன்ன !!!
நாலு ஊரு தேடி ஓடி
நாற்பது பேர் காலில் ஆடி
நானூறு சம்பளத்தில் நயமாக அமர்ந்துபுட்டேன் ...
நாளாக நாளாக நாய் பொழப்புன்னு தெரிஞ்சிகிட்டேன் ...
நான் படிச்ச ஒரு மயிரும்
நாய் பொழப்பில் உதவில்லையே
பட்டம் செஞ்சா பறக்க கூட
எம் பட்டம் உதவில்லையே
நானூறு சம்பளக்காரன் ,..
நல்லவன் என் புள்ளகாரன்
கல்யாணம் செஞ்சிவெக்க,,,,, ஆத்தா
காடு மேடா அலைஞ்சிபுட்டா...
மவராசி கல்யாணமும் பண்ணி வெச்சா...
கால் வயித்து கஞ்சியில வஞ்சி மக வயிராறி
பக்கம் வந்து படுத்திடுவா, இந்தப் பாவி மகன் முழிசிடுவான்..
வயித்துக்கு குறைஞ்சாலும், வயசுக்கு கொடுத்துபுட்டு
வந்த ஆறு மாசத்துல வயிறு முட்ட நின்னிடுவா ...
எமன் ஒருநாள் இறங்கி வந்து எங்கடானு எனை தேட
எம்புள்ள பொறந்திருப்பான், எனை பார்த்து சிரிச்சு நிப்பான்..
என்றோ என் பிள்ளை எழுது கோல் எடுத்து வச்சு
இந்தக் கவிதையின் முதல் வரியை கவனமா தொடர்ந்திடுவான் ....
லேபிள்கள்:
poem,
uncertainity,
urainadai kavithai
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)















