இப்போதும் மற்றும் எப்போதும் மனிதனின் பழைய நினைவு கூறல்கள் காட்சியை சார்ந்த படிமங்களாகவே உள்ளன, எங்கே நீங்களே சோதித்து பாருங்கள், இசையை தவிர உங்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைவு கூற ஒரு மங்கிய அல்லது தெளிவான காட்சி தான் உங்கள் நியூரான்களில் ஒளிந்திருக்கும், அவைதான் அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒன்றாய் இணைத்து ஒரு சீரிய நாடகமாக்குகிறது.
ஒரு கொலைகாரனின் ரத்தம் தோய்ந்த கத்தி, தூங்கும் குழந்தையின் அழகிய முகம், ஒரு பெண்ணின் அரை நிர்வாணம், நீரோடை பிரவாகமுள்ள ஒரு இயற்கை சூழல். இவை அனைத்தையும் ஒரு புகைப்படமாக நீங்கள் பார்க்கும் பொழுது உங்களை அறியாமலே உங்கள் உடலும் மனமும் பதிலாற்றுவதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் பகுத்துணரமுடியாது.
வாழ்க்கையின் உன்னதமான தருணங்களை மீண்டும் அனுபவிக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு நவீன உபாயம் - புகைப்படங்கள். ஆம், அந்நிகரில்லா புகைப்படங்களை நாம் எப்போதும் ஞானபக சுழற்சிக்காகவே பயன்படுத்துகிறோம்.
எந்த ஒரு அசைவுமில்லாமல் வெறும் வண்ணங்களை கொண்ட உணர்ச்சியற்ற காகிதங்கள், நம் மனதில் ஏற்படுத்தும் உணர்சிகள் ஆயிரமாயிரம்.... சந்தேகமிருந்தால் உங்களின் பழைய ஆல்பங்களை புரட்டிபாருங்கள் ...
இந்த இணைப்பில் உள்ள புகைப்படங்கள் எந்த ஒரு நோக்கமுமில்லாமல், பல காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை....முடிந்தால் ரசியுங்கள் ...













கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக