வியாழன், 30 டிசம்பர், 2010

பகிர்வு -- நிகழ்வு

சாரு நிவேதிதா - ப்லோக்ளிருந்து......

எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல் வெளியீட்டு விழா

ஜனவரி 1 ஆந்தேதி மாலை உயிர்மை பதிப்பகம் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘துயில்நாவலின் வெளியீட்டு விழாவினை சென்னை தேவநேய பாவாணர் அரங்கில் நடத்துகிறது. நாவலைப் பற்றிய சிறப்பு விவாதம் ஒன்றும் நடக்கவிருக்கிறது.
முழுவிபரம்
உயிர்மை வெளியீட்டு அரங்கு: 5
எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய நாவல்
நாள்: 1.1.2011 புத்தாண்டு தினம், நேரம்: மாலை 6 மணி,
இடம்: இடம்: தேவநேய பாவாணர் மாவட்ட மைய்ய நூலகம், (LLA Building),
735, அண்ணா சாலை , சென்னை
துயில்
எஸ்.ராமகிருஷ்ணன்
வரவேற்புரை: மனுஷ்ய புத்திரன்
நாவல் அறிமுகம்: சித்ரா
தலைமை: இந்திரா பார்த்தசாரதி
முதல் பிரதி பெறுவோர்:
P.A. அசோக், அறநிலையத் துறை இணை இயக்குனர் கோவை
திருமூர்த்தி, அமெரிக்கா
சிறப்புரை:
நாவல் எனும் சஞ்சாரம்
எஸ்.ராமகிருஷ்ணன்
கலந்துரையாடல் அரங்கு:
டாக்டர் ருத்ரன்
தமிழவன்
.முருகேச பாண்டியன்
யுவன் சந்திரசேகர்

சிறப்பு அழைப்பாளர்கள்
இயக்குனர்கள் ஜேடி ஜெர்ரி
இயக்குனர் முரளிஅப்பாஸ்
இயக்குனர் குமரவேல்
இயக்குனர் ஹோசிமின்
இயக்குனர் மணிகண்டன்

செவ்வாய், 21 டிசம்பர், 2010

படித்ததில் இனித்தது

இனி வரும் சில பதிவுகளில், நான் படித்து சிலாகித்த பல வலைபூக்களின் செய்திகளை பகிர்வேன், இதோ அன்பிற்குரிய நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" என்ற சிறுகதை தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது ... அதை பற்றிய பத்ரியின் - இடுகை (இணைப்பில்)


http://thoughtsintamil.blogspot.com/2010/12/2010.html

 

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

நான்(ம்) கையாலாகாதவன் (ர்கள்) ...



அவர்கள் நிதானமாய் பார்க்கிறார்கள்
நான் சுயம் குன்றித் திரும்பிக்கொள்கிறேன்...

அவர்கள் அழ முற்படுகிறார்கள்
நான் கவனமாய் கண் குறுக்கிக்கொள்கிறேன் ...

அவர்களுக்கு மெல்லிய விசும்பலுடன் கண்ணீர் ததும்புகிறது 
நான் வெற்று சமாதானங்களுடன் துடைக்க முயல்கிறேன் ...

கடைசி துளி உயிரையும் கூட்டி கதறுகையில் 
யாரையோ கைகாட்டி திட்டியபடி திரும்பி நடக்கிறேன் ...

புதன், 8 டிசம்பர், 2010

the stupid master: சாரு-வின் அழைப்பிதழ்

the stupid master: சாரு-வின் அழைப்பிதழ்: "அழைப்பிதழ் .... தேகம் December 8th, 2010தேகம் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு ஜனவரி முதல் தேதி டி.சி. புக்ஸ் நிறுவனத்தால் திருவனந..."

சாரு-வின் அழைப்பிதழ்

அழைப்பிதழ் .... 

தேகம்

தேகம் நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு ஜனவரி முதல் தேதி டி.சி. புக்ஸ் நிறுவனத்தால் திருவனந்தபுரத்தில் வெளியிடப்படுகிறது. மொழிபெயர்ப்பு ப்ரஜானந்த்.  நேற்று ப்ரஜானந்த் கோவையிலிருந்து பேசினார். ப்ரஜானந்த் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அந்த நாவலில் செலின் காணாமல் போகும் இடத்தைப் படித்து அழுது விட்டதாகக் குறிப்பிட்டார். உண்மைதான்.  அப்படிக் கண்கலங்க வைக்கும் இடம்தான் அது.  மர்க்கி தெ சாத் தமிழில் எழுதியிருந்தால் எப்படி எழுதியிருப்பாரோ அப்படி இருந்தது நாவல் என்றும் சொன்னார்.  சாதுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் சாத்-இன் எழுத்தைப் படித்து கண்ணீர் வராது.  தேகம் போன்ற ஒரு intense-ஆன எழுத்தை இதுவரை நான் எழுதியதில்லை.  இப்போது என் எழுத்தில் எனக்கு ஆகப் பிடித்த நாவல் எது என்று என்னைக் கேட்டால் தேகம் என்றுதான் சொல்லுவேன்.
முதலில் கூட்டமே வராது என்றார்கள்.  இப்போது ’கூட்டம் வரும்; ஆனால் அது கனிமொழிக்கும் குஷ்புவுக்கும் வரும் கூட்டம்’ என்கிறார்கள்.  இப்படிச் சொல்வது அவர்களின் மூடத்தனத்தையே காட்டுகிறது.  எப்படி என்றால், கேரளத்தில் பொதுவாக புத்தகங்களுக்கு வெளியீட்டு விழா நடத்துவதில்லை. அப்படி நடத்தாமலேயே அங்கே லட்சக் கணக்கில் விற்கின்றன.  இங்கேயோ கனிமொழிக்காக கூட்டம் வருகிறது; குஷ்புவுக்காக கூட்டம் வருகிறது என்று மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சிலைத் துப்பிக் கொண்டிருக்கிறார்கள்.  பாவமாக இருக்கிறது. எழுத்தாளனை மதிக்காத சமூகம் என்பதற்கு இதைவிட உதாரணம்  வேறு வேண்டியதில்லை.  என்னுடைய ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த மதன் “இது என்ன புத்தக வெளியீட்டு விழாவா? அல்லது, ரஜினியின் முதல் காட்சியா?” என்று வியந்தார்.  அதையே இந்த மூடர்களுக்கு பதிலாகச் சொல்லுவேன்.
கூட்டம் முடிந்து வழக்கமாக காக்டெய்ல் பார்ட்டி இருக்கும்.  இந்த ஆண்டு இல்லை.  காரணம், சில பார்ட்டி ஸ்பாய்லர்கள் வந்து கெடுத்து விடுகிறார்கள்.  அதனால் இந்த ஆண்டு காக்டெய்ல் பார்ட்டி கிடையாது. கீழே மீண்டும் ஒரு அழைப்பு.
(வெளியீட்டு விழாவுக்கு வருபவர்கள் யாரும் அழைப்பிதழை எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை.  அனைவரும் வரலாம்…)
Dear friends,
It takes immense pleasure in inviting you to my book release function on 13th December 2010 at Kamarajar Arangam at 6:00 pm. Seven new books published by Uyirmmai Publications  are  being released in the event. The event will be honoured by esteemed guests which includes
Ms. Kanimozhi, MP
Mysskin
S. Ramakrishnan
Dr. Nalli Kuppusamy Chettiyar
A. Natarajan
Ravikumar MLA
Kushboo
Manushya Puthiran
Thamizhachi
Madan (Cartoonist)
I solicit your gracious presence on the occasion and request you to make it convenient to attend the function and make it a grand success.
I request you to kindly forward the Invitation online to our friends and well wishers.
Charu Nivedita
Address of the Venue :
Kamaraj Arangam
492, Anna Salai
Teynampet
Chennai
Comments are closed.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

எந்திரன் - கோடிகளில் கொள்ளை

எந்திரன் - விமர்சனம் என்ற உடனே, படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகா!! என யாராவது வாயை பிளந்தால் நான் பொறுப்பல்ல, ஏனெனில் எனக்கு விஷேஷ தகுதியுண்டு, யாதெனில் நான் இன்னமும் எந்திரனை பார்க்கவில்லை, படமே பார்க்காமல் விமர்சனமா-உங்கள் கேள்விகள் என் காதில் விழுகிறது, என் பதில் ஆம்,



ஒவ்வொரு விமர்சகரும் தங்களுடைய அளவு கோல்கள் மூலம் அப் படத்தை இகழ்ந்தும், புகழ்ந்தும் பந்தாட, நான் எனக்கே உரிய கோல்களை கொண்டு அளக்க முற்பட்டதன் விளைவு, இந்த பத்தி,
சமீபத்தில் மாநகராட்சி அந்தஸ்து கொடுத்து அழகு பார்த்த நகரம், கிட்ட தட்ட 25 - க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்னகத்தே கொண்டு வேலூர் மக்களின் கலை பசியை போக்கி வருகிறது, இதில் பல திரையரங்குகள் காதலர்களுக்கும், காமுகர்களுக்கும் எழுதப்படாத சரணாலயமாக மாறிபோயிருக்கும் வேளையில், எந்திரன் என்ற வெகுஜன ரசிகர்களுக்காக எடுக்க பட்ட படம் சக்கை போடு போடுகிறதாக கேள்வி, அனைத்து சென்டர்களிலும் பல கோடிகளை அள்ளிய இப்படம் கண்டிப்பாக வணிக ரீதியில் தோல்விப்படம் கிடையாது ஆனால் இது நல்ல படமா என்பதை பற்றிதான் கேள்வியே.,,

எங்கள் ஊரில்  ப்ளு  என்று  ஒரு  திரையரங்கு  உள்ளது,  அதன்  விசேஷம்  என்னவெனில், வேலூரில்  ரிலீஸ்  செய்த  என்ன  படமானாலும்  அதன்  இரண்டாம்  வெளியீடு  இந்த  தியேட்டரில்தான், ஒரு  படம்  வெளியாகி  இந்த  ப்ளு  தியேட்டருக்கு  எத்தனை  நாட்கள்  கழித்து  வருகிறது, என்பதை  பொறுத்துதான்  அந்த  படத்தின்  வெற்றி  என்னை  பொறுத்தவரை  தீர்மானிக்கப்படுகிறது,இதோ  உலகமே  கொண்டாடிய  (அல்லது  கொண்டாட  நிர்பந்திக்கப்பட்ட ) எந்திரன்  எங்கள்  தியேட்டருக்கு  மிக  சீக்கிரத்தில் வந்து  சேர்ந்த்தது (நீங்களே யூகித்துகொள்ளவும்) , அதன்  வசூல்  சொல்ல  வேண்டியதில்லை, தமிழ்  நாட்டை  கூறு  போட்டு  சுரண்டி  ஊழல்  புரிந்த , புரிகிற , நபர்களையும் , நபரையும்  தன்னகத்தே  கொண்ட  பல  கட்சிகளில், இன்று  நாட்டை  ஆளும்  கட்சியின்  மற்றும்  குடும்பத்தாரின்  மற்றுமொரு  பரிமாணம்  "தயாரிப்பாளர்கள்" . இளைய  வயது  பையன்களெல்லாம்  கோடிகளில்  படமேடுத்துக்கொண்டிருக்க  மூத்தவர்  150 கோடியில்  படமெடுப்பது  ஆச்சர்யத்துக்குரியதல்ல,

எந்திரன்  - பாடல்கள்  கேட்கும்  வண்ணமில்லை , காது  குடைகிறது , தொலைக்காட்சியில்  போடும்  கிளிப்ஸ்  - பார்க்க  தூண்டுவதாயில்லை , மேலும்  பேட்டியே  கொடுக்காத  மற்றும்  தன்  சொந்த  படத்துக்கு  கூட  பேசாத  ரஜினி -யை  கிட்டத்தட்ட  எந்திரனின் வியாபார  விநியோகஸ்தராக  மாற்றிய  பெருமை  சன்  பிச்சர்ஸ் -க்கு  உண்டு . ஐஸ்வர்யா - நாற்பதை தொட  போகிற  வயதிலும்  திரையில்  அழகாக தெரிகிறார் (நடிப்பில் ???).

பல  இணையவாதிகள்  தங்கள்  ப்ளாக் -களில் , எந்திரனை  கிழி  கிழி  என  கிழித்தும் , காது  கூசும்  அளவுக்கு  புகழ்ந்தும் தள்ளியிருக்கும்  நேரத்தில் , படமே  பார்க்காமல்  நான்  எழுதியிருக்கும்  இவ்  விமர்சனம்  சற்று  வித்தியாசம்தான் .

என்  நண்பர்  ஒருவர்  கேட்டார் , எந்திரனை  பார்த்தீர்களா ?
"இல்லை"
எப்போது  பார்ப்பதாக  உத்தேசம் ,
"அடுத்த  தீபாவளியன்று  சன்  டி.வி - யில்"....

உண்மையான  எந்திரன்  யார்  தெரியுமா ??? கீழே உள்ள இணைப்பை கிளிக்குங்கள் ....   
http://www.youtube.com/watch?v=TxeMgj4kKIg

சனி, 6 நவம்பர், 2010

புகைப்படங்கள் - நிஜங்களின் நிழல்கள்

இப்போதும் மற்றும் எப்போதும் மனிதனின் பழைய நினைவு கூறல்கள் காட்சியை சார்ந்த படிமங்களாகவே உள்ளன, எங்கே நீங்களே சோதித்து பாருங்கள், இசையை தவிர உங்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைவு கூற ஒரு மங்கிய அல்லது தெளிவான காட்சி தான் உங்கள் நியூரான்களில் ஒளிந்திருக்கும், அவைதான் அந்த குறிப்பிட்ட நிகழ்வுகளை ஒன்றாய் இணைத்து ஒரு சீரிய நாடகமாக்குகிறது.

ஒரு கொலைகாரனின் ரத்தம் தோய்ந்த கத்தி, தூங்கும் குழந்தையின் அழகிய முகம், ஒரு பெண்ணின் அரை நிர்வாணம், நீரோடை பிரவாகமுள்ள ஒரு இயற்கை சூழல்.  இவை அனைத்தையும் ஒரு புகைப்படமாக நீங்கள் பார்க்கும் பொழுது உங்களை அறியாமலே உங்கள் உடலும் மனமும் பதிலாற்றுவதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்தில் பகுத்துணரமுடியாது.

வாழ்க்கையின் உன்னதமான தருணங்களை மீண்டும் அனுபவிக்க மனிதன் கண்டுபிடித்த ஒரு நவீன உபாயம் - புகைப்படங்கள். ஆம், அந்நிகரில்லா புகைப்படங்களை நாம் எப்போதும் ஞானபக சுழற்சிக்காகவே பயன்படுத்துகிறோம்.

எந்த ஒரு அசைவுமில்லாமல் வெறும் வண்ணங்களை கொண்ட உணர்ச்சியற்ற காகிதங்கள், நம் மனதில் ஏற்படுத்தும் உணர்சிகள் ஆயிரமாயிரம்.... சந்தேகமிருந்தால் உங்களின் பழைய ஆல்பங்களை புரட்டிபாருங்கள் ...

இந்த இணைப்பில் உள்ள புகைப்படங்கள் எந்த ஒரு நோக்கமுமில்லாமல், பல காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை....முடிந்தால் ரசியுங்கள் ...   














வியாழன், 4 நவம்பர், 2010

ஒரு பாமரனின் வாழ்க்கை - பழகி விட்ட வாழ்க்கை
















எங்கோ இரண்டு உயிர் 
          ஏங்கிக் கிடக்கையிலே 
முதல் முத்தம் கொடுக்கையிலே 
          முயங்கிப் படுக்கையிலே 
ஒரு துளியாய் நான் வந்தேன் 
          ஓங்காரமாகிப்புட்டேன் 



 என் தாயி கருக்குள்ளே 
          இருட்டு சிறைக்குள்ளே 
எத்தனை நாள் மிதந்தேனோ 
          எனை மறந்து கிடந்தேனோ 

கறுப்புக் குடங்குள்ளே 
          கருவழிஞ்சி போயிருந்தா 
வரமோன்னு நினைச்சிருப்பேன் 
          வந்த வழி போயிருப்பேன்

உன் வயித்த கிழிச்சி என்னை 
          ஒத்தையிலே போட்டாலே 
அந்த மருத்துவச்சி மண்டையிலே 
          மாடு ரெண்டும் முட்டுமோடி 

தாய் பால குடிச்சிபுட்டு 
          தலைபுரண்டு கெடக்கயிலே
முலை பால முட்டி முட்டி 
          முங்கிக் குடிக்கையிலே 
எனக்கேதும் தெரியாதே 
           என் தாயி இவதான்னு 

சில நாள் பால் கொடுத்தே 
           பல நாள் பழம் கொடுத்தே 
வெடுக்கென நிறுத்திபுட்டே
           வெள்ளை சோறை நீட்டிபுட்டே 

காசுன்ன தெரியாது 
           கடுகு வெலை கூட அறியாது 
காலம் எனை கடக்கையிலே 
           காண்வென்டில் சேத்துப்புட்ட..
ஒன் , டு , த்ரீ - யும் 
          ஏ , பி , சி - யும் 
ஏன்னே தெரியாம 
         ஏழு நாள் கத்திப்புட்டு 
எனை மறந்து தூக்கத்துல 
         ஏதேதோ சொல்லி வைக்க 

இங்கிலீசு பேசுறான் - எம்பையன்னு சொல்லிக்கிட்டு 
ஏழூரு சொல்லிவச்ச, எனை வாரி முத்தம் வைச்ச ..

கருத்து தெரியும்முன்னே காலாண்டு பல கடந்தேன் 
அரையாண்டு பரீட்ச்சை எல்லாம் அருவெறுப்பா எழுதிவச்சேன் 
முழு ஆண்டு முடிப்பதற்குள் முழி பிதுங்கி போனதடி 
பத்தாவது பாஸ் பண்ண பைத்தியம் தான் ஆனேனடி 

கணக்கு சூத்திரமோ, காலனி ஆதிக்கமோ,
நியூட்டன் விதிகளோ, நியாண்டர்தால் மனிதனோ 
புத்தகத்தில் உள்ளதெலாம் பொல பொல-னு குடிச்சிவச்சேன் 
வந்தமர்ந்த தேர்வில் எல்லாம் வாந்தியாய் எடுத்து வச்சேன்   

விலைவாசி தெரிஞ்சதில்லை 
வீட்டு  கஷ்டம் அறிஞ்சதில்ல
விளையாட்டா வாழ்க்கை போக ...
திடீர்னு வேலைக்கு போகச்சொன்ன !!!

நாலு ஊரு தேடி ஓடி 
நாற்பது பேர் காலில் ஆடி 
நானூறு சம்பளத்தில் நயமாக அமர்ந்துபுட்டேன் ... 
நாளாக நாளாக நாய் பொழப்புன்னு தெரிஞ்சிகிட்டேன் ...

நான் படிச்ச ஒரு மயிரும் 
நாய் பொழப்பில் உதவில்லையே  
பட்டம் செஞ்சா பறக்க கூட 
எம் பட்டம் உதவில்லையே 

நானூறு சம்பளக்காரன் ,..
நல்லவன் என் புள்ளகாரன் 
கல்யாணம் செஞ்சிவெக்க,,,,, ஆத்தா 
காடு மேடா அலைஞ்சிபுட்டா...

மவராசி கல்யாணமும் பண்ணி வெச்சா...

கால் வயித்து கஞ்சியில வஞ்சி மக வயிராறி 
பக்கம் வந்து படுத்திடுவா, இந்தப் பாவி மகன் முழிசிடுவான்..
வயித்துக்கு குறைஞ்சாலும், வயசுக்கு கொடுத்துபுட்டு 
வந்த ஆறு மாசத்துல வயிறு முட்ட நின்னிடுவா ...

எமன் ஒருநாள் இறங்கி வந்து எங்கடானு எனை தேட 
எம்புள்ள பொறந்திருப்பான், எனை பார்த்து சிரிச்சு நிப்பான்..

என்றோ என் பிள்ளை எழுது கோல் எடுத்து வச்சு 
இந்தக் கவிதையின் முதல் வரியை கவனமா தொடர்ந்திடுவான் ....



சனி, 30 அக்டோபர், 2010

ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் - அழியா காவியம்

ஸ்டீவென் ஸ்பீல்பர்க்-இன் டினோசர் படங்களின் பிரமிப்பில் கடந்துவந்த  என் பதின் பருவம், அதன் மீதான க்ராபிக்ஸ் மோகத்தை இழக்கும் முன்னே, ஸ்பீல்பர்க் மீண்டும் அவரின் மாஸ்டர் பீஸ் மூலமாக என்னை நிரந்தர அடிமை ஆகிவிட்டார்.

 ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் - ஸ்பீல்பர்க்-இன் ஆகச்சிறந்த படைப்பு என்பதற்கு உலக அளவில் கிடைத்திருக்கும் வரவேற்பே சான்று ... 
ஒரு தனி மனிதனின் முட்டாள் தனம் வரலாற்று பக்கங்களில் அழிக்க முடியாத கரையை அந்நாட்டு மக்களுக்கு விட்டு செல்லும் என்பதற்கு ஜெர்மன் மக்களின் இப்போதைய குற்ற உணர்வும் அந்த முட்டாள் ஹிட்லருமே சாட்சி.
காதலையும்,காமத்தையும், பல கன்றாவிகளையும் கலந்து கொடுத்தே தமிழ் சினிமாவையும் அதன் ரசிகர்களையும் நீர்த்துபோகச் செய்த நம் இயக்குனர்கள் இந்த படத்தை பார்த்தால் விட்டத்தில் தொங்குவார்கள் என்பது நிதர்சனம்,ஆனால் நம் ஆட்கள் இதிலிருந்தும் பல சீன்களை உருவிவிடுவார்கள் என்பது காணும் நிஜம்..
இக் காவியம் ஒரு போலிஷ் குடும்பத்தின் சப்பாத் பிராத்தனையோடு தொடங்குகிறது, கருப்பு வெள்ளையிலேயே பெரும்பான்மையாக எடுக்கப்பட்ட இப்படம் தேவையான இடங்களில் வண்ணங்களை கொண்டும் ஜாலம் செய்திருக்கிறார்கள்.
ஜெர்மனியின் நாஜிக்கள் போலிஷ்-ஐ தங்கள் கட்டுப்பட்டுக்குள் கொண்டுவந்து அங்குள்ள யூதர்களை ஜெட்டோ-விற்கு அனுப்புகிறது இதனிடையில் ஷிண்ட்லெர்-ஆக வரும் ஒரு வியாபார நோக்கமுள்ள மனிதன் எப்படி இந்த யூதர்கள் பால் காதல் கொண்டு மனிதாபிமானி ஆகிறான் என்பதை பல இயற்கையான காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் அழகிய ஓவியமாக தீட்டியிருக்கிறார்கள்.
அன் நகரத்திற்கு ராணுவ அதிகாரியாக வருபவனின் மன ஓட்டத்தை ஒரே காட்சியில் புரியவைப்பது இயக்குனரின் திறமைக்கு சான்று.
ஒரு இனத்தின் மீதுள்ள ஒரே ஒரு நபரின் முட்டாள் தனமான வெறி எப்படி அந்நாட்டு மக்களிடம் பரவி ஒரு தேசத்தையே அழித்தது என்பதற்கு இப்படம் மற்றும் கதை உதாரணம்...
இன்றும் பல நாடுகளில் நடந்து வரும் இனப் போராட்டங்கள் சர்வாதிகாரமாக ஒடுக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது இப்படம் மூலம் நன்கு விளங்கும்.
என்னதான் நான் பக்கம் பக்கமாக விமர்சனம் எழுதினாலும் இப்படத்தை பார்த்து காட்சி இன்பத்தை அனுபவிப்பதற்கு நிகர் வேறேதுமில்லை, இந்த எழுத்துக்கள் அதற்கான ஆர்வத்தை உங்களுக்குள் விதைக்கவே அன்றி வேறெதற்குமில்லை ... 
ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் - நமது அருகாமையில் உள்ள DVD ஷாப்-களில் கிடைக்கிறது, இப்படத்தை பார்த்தால், நம் தமிழ் பட இயக்குனர்கள் மீது உங்களுக்கு வரும் கோவத்தையும் ஆத்திரத்தையும் எதை கொண்டும் அடக்கமுடியாது ... 
இப்படத்தின் trailer - ஐ காண கீழே கிளிக்கவும் ....
http://www.youtube.com/watch?v=TAH3RTRlCHY

புதன், 27 அக்டோபர், 2010

வேலுரை சூழ்ந்த தீவினை - துணை முதல்வரின் வருகை

பல வரலாற்று சிறப்பு மிக்க வேலுரை , மாநகராட்சியாக மாற்றி அழகு பார்த்தது இந்த நோக்கத்திற்க்காகதான் எனில் அந்த மானம்கெட்ட சிறப்பு நமக்கேன்...

மக்களை வெறும் ஓட்டு போடும் சாதனமாகவும், அதற்கு உயவாக டாஸ்மாக் திரவத்தையும் ஊற்றி தங்களின் சுய லாபத்துக்காக ஆட்டிவைப்பது ... திராவிட இயக்கங்களுக்கே உண்டான தனிக்கலை...

இவ்வகையான விமர்சனங்களால் .. நான் எந்த ஒரு கட்சிக்கும் உரியவனல்லவெனவும், எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி என் கருத்துகளை இங்கேழுதவும் விரும்புவன் என்றும் தாங்களரிவீர்கள் என நம்புகிறேன்..

என்ன மாதிரியான சலுகைகளையும், எந்த மாதிரியான சிறப்பு மிக்க திட்டத்தையும் துவக்க துணை முதல்வர் இங்கே (வேலூர்) வந்தாரென்று நானறியேன் பராபரமே ... ஆனால் அந்த பயன்கள் அனைத்தும் பாழாய் போவது போல் இந்த மூன்று நாட்களும் இந்த ஊரையே படு நரகமாக்கிய பெருமை ஸ்டாலினுக்கு உண்டு ...

கருப்பு சிவப்பு கொடிகளும், வண்ண மயமான பேனர்களும் .. நடைபாதையை அடைத்ததுமிலாமல் ... வாகன போக்குவரத்தையே ஸ்தம்பிக்க செய்ததது .. ஒன்னரை மணிநேரமாகியும் ஒரே இடத்தில் புகை கக்கி கொண்டிருந்த வாகனங்களை பார்கையில் .. நம் நாட்டுக்கு முதல்வர்கள் வேண்டுமா என்பதையே யோசிக்க வைத்தது ...

சாலையோர கடைகளில் மாமுல் வாங்கும் காவலர்கள், இன்று மட்டும் ஏனோ அவைகளை அப்புறப்படுத்தியிருந்தார்கள். ஒரு தள்ளு வண்டி கடைக்காரியிடம் சீருடை அணிந்த அதிகாரி மாமுல் கேட்டதை கண்ணார கண்டிருக்கிறேன் ... நான் இந்நாட்டை பற்றி கவலை படுவதை விட அவர் வீட்டு பெண்களை பற்றியே கவலை கொண்டேன்... மனைவியை புணர்வதற்கும் இவர்கள் லஞ்சம் கேட்பார்கலென..

நல்ல திட்டங்களையும், மக்களை மேன்மக்களாக்கவும் செய்ய வேண்டிய கடமையை , ஊர் கூட்டி மைக் போட்டு அதை செய்தோம், இதை செய்தோம் என இவர்கள் அங்கலாய்ப்பது வியப்பையே கூட்டுகிறது...

இறுதியாக என் அன்புக்கினிய ஸ்டாலினுக்கு என் வேண்டுகோள், தயவு செய்து உங்கள் நல்ல திட்டங்களை அரசு எந்திரம் மூலமாக அமுல்படுத்துங்கள். உங்களின் ஆடம்பர வருகை ஒரு சாதாரணனுக்கு பயத்தையும், வெறுப்பையுமே ஏற்படுத்துகிறது.

மதுரை மக்கள் வீச்சரிவாளோடு திரிவார்கள் என்று நம்ப வைத்த சினிமாவையும், தங்கள் பலத்தை நிரூபிக்க மதுரையை கட்-அவுட்-களாலும், நாராசமான மேடை பேச்சுகளாலும் நிரப்பும் உங்களை போன்றவர்களும் சேர்ந்து எங்கள் வேலுரை மற்றுமொரு மதுரையாக மாற்றவேண்டாம்...

வியாழன், 21 அக்டோபர், 2010

குறும்படமும் .... குற்றங்களும் ....

மக்கள் தொலைகாட்சி தமிழகத்தின் குரல் என்றும் , தமிழரின் குரல் என்றும் ... பீற்றிக்கொண்டிருக்க... அதற்கு சப்பை கட்டு கட்டும் வேலையாக சினிமா சம்பந்தப்பட்ட எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒளிபரப்பா வண்ணம் தவம் கிடந்தார்கள்..

சமீபத்தில் சினிமா பாடல்களை பற்றியும் அதன் பாடகர்களுடனும் பேட்டி காணும் அன் பிளக் - நிகழ்சிகள் தொடங்கிவிட்டன ... மக்கள் தொலைக்காட்சிக்கு வந்தனம் .. ரஜினியையும் கமலையும் இவர்கள் படுத்திய பாடுகள் இனிமேல் திரையரங்கு இருட்டினுள் காணாமல்போகும் ...

நாட்டை ஆளும் இளைஞரின் பேரன்கள் கோடி கோடியாய் சினிமா எடுத்துகொண்டிருக்க .. இவர்களின் குடும்பம் மட்டும் தமிழ் மக்களைப்போல் இளிச்சவாயனா என்ன ? வெள்ளோட்டம் பார்க்க இதை விட வேறென்ன நல்ல நேரம் இருக்க முடியும் ...

ஆனால் மக்கள் தொலைகாட்சி , என் உள்ளம் கவர்ந்தவைகளில் ஒன்று .. அதன் ஆரம்ப கால கட்ட நிகழ்சிகளும், இன்றும் புதிதான முயற்சிகளும், என்னை வெகுவாக ஈர்க்கின்றன ... ஈரானிய மற்றும் ரஷிய மொழி திரைப்படங்கள், குறும்படங்களின் மதிப்பீடுகள், எட்டுக்கு எட்டு, உண்மை மற்றும் நாட்டுப்புற கலைகளை பற்றிய அதன் நிகழ்ச்சிகள் என்று அதன் வரிசை நீளும் ...

பிடிக்காத நிகழ்ச்சி எனில் "ஆசை"-யை முதலிடத்தில் வைக்கலாம், இவங்க கார் எடுத்துகுனு சேரிக்கு போவான்கலாம் .. அங்க இருக்கிற சேரி பையனுக்கு அன்னிக்கு பூரா மிட்டாய் வாங்கி தருவாங்களாம்... இவர்களின் இந்த தமிழ் நிகழ்ச்சியை விட என்ன கொடுமை இருக்க முடியும் .. "கொடிதிலும் கொடிது இளமையில் வறுமை",பின் எப்படி இவர்கள் ஏதுமறியாத அந்த குழந்தைகள் மனதில் ஏற்றத்தாழ்வை விதைக்கலாம்...?????

புதன், 20 அக்டோபர், 2010

விகசிப்பு ...

சில எதிர்பாராத நிகழ்வுகளின் மூலமாகத்தான் நாம் வாழ்கையின் நிலையாமையையும், அதன் தன்னிகரற்ற போக்கையும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்கை சிறு இமி கூட எதற்கும் உதவாதது என்பதும் நம் கன்னத்தில் அறைந்து சொல்லப்படும், ஆனால் எப்போதும் போல், உலகாயாதமான பாசாங்கு சமாதானங்கள் மூலமாக மீண்டும் அதே குட்டையில் மலங்க மலங்க மலம் அள்ளிக்கொண்டிருப்போம்...

மனித குல மேம்பாடு, சமத்துவ உரிமை,மனித நல்லினக்கணம், குல தாழ்ச்சி பாராமை,எல்லோரையும் தன்னுயிர் போல் நேசித்தல்.... இவை எல்லாம் எங்கோ படித்து போல் ஞாபகம் ...

எப்படி ஒரு மனிதன் தன் நாட்டினையும் , தன்னையும் உன்னதமாக்க என்று திரு, ஜெக்கியின் விடியோவை இணைப்பில் பார்க்கவும்...

உரையாடலின் கருத்து முகத்தில் அறைகிறது ....
சற்றே பெரிய படச்சுருள் ...

திங்கள், 18 அக்டோபர், 2010

சாருவும் நானும் ...

நான் ஒரு கத்துக்குட்டி என்பதால் . . . எப்படி இந்த ப்ளாக்-ஐ மிகவும் பிரபலமடைய செய்வது என்று யோசித்தேன், ஒன்று இபோதைக்கு ரஜினி ரேஞ்சில் இருக்கும் சாருவை வாழ்த்தவேண்டும் அல்லது வசைபாடவேண்டும், எதை செய்தலும் அவர் தன் ப்ளாக்-இல் வெளியிட்டு நம்மை பிரபலபடுத்திவிடுவார்,...

எனவே திரு.சாரு அவர்களே, தாங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியான தமிழ் திரைப்படவிழாவில் பங்கேற்று, நான் என் கோபத்தையும், குரூரத்தையும் கண்பிக்கப்போகிறேன்....

ஆமாம், இது என்ன திட்டா இல்லை வாழ்த்தா....
நன்று, இன்று, திரு.எஸ்ராவின், வலைப்பூவில் படித்த சிறிய கட்டுரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, இலையை பற்றிய அந்த சிறிய இடுகை , ஒரு குறு நாவலுக்கான செய்தியை தன்னகத்தே கொண்டிருந்ததை என்னால் நன்குனரமுடிந்தது, என் சிறு வயதில் இலையை பற்றிய கவிதைகளை எழுதி என் ஆசிரியர்களிடம் கண்பித்து திட்டு வாங்கியது நினைவுக்கு வருகிறது.

செடியும், மரமும் அவற்றுக்கே உரிய கதைகளையும் , கவிதைகளையும் மௌனமாக பேசிக்கொள்கின்றன, வண்டுகளுக்கே மட்டும் கேட்கும் வகையில் அவை தன ரகசியங்களை முனுமுனுகிறது,.....

நீங்களே பாருங்கள் மேற்சொன்ன வகையில் கவிதை வரைந்து கொடுத்தல் யார்தான் திட்டமல் இருப்பார்கள்....

---- ஹி இஸ் எ மாஸ்டர் , பட் ஸ்டுபிட்

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இன்று எனக்கு பிறந்த நாள்

அன்புடன் சிவம் எழுதும் இந்த தொல்லைகளை சற்றே பொறுத்து படிக்கவும்